திருச்சி ராமஜெயம் கொலை;; இரண்டாண்டுகள் முடிந்தும் அவிழாத மர்ம முடிச்சு

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சரின் தம்பி கே.என். ராமஜெயம் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனால் கொலையின் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது.

லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தமிழகத்தில் சட் டம் - ஒழுங்கு நிலைமை மோசம் என்பதற்கு இந்த வழக்கை உதாரணம் காட்டி பேசி வருகின்றனர்.

துப்பு துலக்குவதில் இந்தியாவில் சிறந்த மாநில காவல்துறைகளில் ஒன்றான தமிழக காவல்துறை இதுவரை இந்த வழக்கில் ஒரு சிறு துரும்பு கூட துப்புக் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறது.

நேருவின் மூளை ராமஜெயம்

நேருவின் மூளை ராமஜெயம்

மத்திய மண்டல திமுக.வின் மிக வலிமையான தூணாக திகழும் திருச்சி மாவட்ட திமுக செயலர் நேருவுக்கு வலதுகரமாகவும், அவரது அரசியல் ஏற்றத்துக்கும், அந்த குடும்பத்தினரின் பொருளா தார எழுச்சிக்கும் மூளையாக திகழ்ந்தவர் அவரது தம்பி ராம ஜெயம்.

கொடூரக் கொலை

கொடூரக் கொலை

நடைப்பயிற்சி சென்ற ராமஜெயத்தை கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கடத்திச் சென்று சில மணி நேரம் கொடூர சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்துள்ளது.

விசாரணையில் தடுமாற்றம்

விசாரணையில் தடுமாற்றம்

ராமஜெயம் கொலை நிகழ்ந்த அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றதாக வீட்டிலுள்ளவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராமஜெயம் கொலை நிகழ்ந்து 12 மணி நேரமிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சிக்கு புறப்பட்டவர் 8.30 மணியளவில் கல்லணை சாலையில் சடலமாகக் கிடந்தார்.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

ராமஜெயம் கொலையாவதற்கு சில மாதங்கள் முன்பே மது அருந்துவதை விட்டுவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.

ஆனால் ராம ஜெயம் உடலை பிரேத பரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் சிறிதளவு மது இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

குழப்பத்தில் காவல்துறை

குழப்பத்தில் காவல்துறை

மதியம் 1 மணிக்கு பிரேத பரிசோதனை நடந்தது. ஆனால் மரணம் நிகழ்ந்து 12 மணி நேரமிருக்கலாம் என வெளியான பிரேத பரிசோ தனை அறிக்கை காவல்துறையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிபிசிஐடிக்கு மாற்றம்

சிபிசிஐடிக்கு மாற்றம்

இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர விசாரித்தனர். மூன்று மாதங்கள் கழித்து சிபிசிஐடி போலீஸ் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

1400 பேரிடம் விசாரணை

1400 பேரிடம் விசாரணை

இதுவரை 1400 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ள சிபிசிஐடி அந்த வழக்கில் சிறிதளவும் முன்னேற முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

செல்போன் தொடர்புகள்

செல்போன் தொடர்புகள்

3000 செல்போன் தொடர்புகள் விசாரிக்கப்பட்டுள்ளன. விலாசம், புகைப்பட ஆதாரம் இல்லாமல் வாங்கப்பட்ட 7 சிம் கார்டுகள் மூலம் செல்பேசி தொடர்புகள் கொலை நிகழ்ந்த அன்று திருச்சி பகுதியில் புழக்கத்திலிருந்துள்ளன. பிறகு அவை புழக்கத்திலேயே இல்லை

ஆயிரக்கணக்கான எதிரிகள்

ஆயிரக்கணக்கான எதிரிகள்

ராமஜெயம் கொலை விவகாரத்தை விசாரணை செய்ய ஆரம்பித்த போது அவருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட எதிரிகள் இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்யக்கூடிய அளவுக்கு பயங்கரமான எதிரிகள் யாரென்று அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் தெரிந்திருக்கலாம். என்ன காரணத்தினாலோ அவர்கள் வெளிப்படையாக எதிரிகளைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே உற்சாகத்தில் போலீஸ்

அதே உற்சாகத்தில் போலீஸ்

ஆரம்பத்தில் 14 தனிப்படைகள் அமைத்து இந்த வழக்கை துப்புத் துலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிபிசிஐடி போலீஸார், அதே உற் சாகத்துடன் இன்னமும் நம்பிக்கை யுடன் இந்த வழக்கை துப்புதுலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் எப் படியும் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம். ஆனால் அது எப்போது வேண்டுமானலும் நிகழ லாம் என்றும் நம்பிக்கையோடு கூறிவருகின்றனர். ராமஜெயத்தின் குடும்பத்தினரிடம் இருந்து தேவையான தகவல் கிடைத்திருந்தால் இந்த வழக்கு எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்று கூறும் போலீசார், ராமஜெயம் கொலை வழக்கில் உள்ள மர்மங்கள் அனைத்துக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+