என்னது காங்கிரசில் மீண்டும் சேரப் போகிறேனா...நெவர்... நடக்காது.... ஜி.கே.வாசன் திட்டவட்டம்
திருவாரூர்: தாம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரப் போவதாக வெளியான செய்திகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டது தமாகா. இந்த கூட்டணி அமைந்தது முதலே தமாகா சிதறிப் போனது.

தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமாகாவின் மூத்த தலைவர்கள் பலரும் அதிமுகவுக்கு தாவினர்... காங்கிரஸுக்கே திரும்பினர். இது தொடர் கதையாகி வருகிறது.
இதனால் தனித்துவிடப்பட்ட ஜி.கே.வாசன், தமாகாவை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இதற்காக டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தாம் காங்கிரஸுக்கு மீண்டும் திரும்பப் போவது இல்லை; ஒருபோதும் காங்கிரஸ் கட்சியில் சேரவே மாட்டேன் என் திட்டவட்டமாக கூறியுள்ளார் வாசன். இது தொடர்பாக வாசன் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றால் தமிழ்மாநில காங்கிரஸ்தான் என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பற்றி தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும்.
டெல்லி, மும்பை என்று பல மாநிலங்களுக்கு செல்வேன். அதற்காக கற்பனையான வதந்திகளை பரப்புவது ஏற்கத்தக்கதல்ல.
நாங்கள் காங்கிரசை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் வழியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
உயிரோட்டமுள்ள முன்னணி இயக்கமாக த.மா.கா உருவாகி கொண்டிருக்கிறது. மீண்டும் காங்கிரசில் இணைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை!












Click it and Unblock the Notifications