மோடி வெறும் புழுதிக்காற்று; பாஜக கூட்டணி உடைந்து நொறுங்கிவிடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு: பாஜக கூட்டணி ஒரு வலுவிழந்த கட்டிடம் அது உடைந்து நொறுங்கிவிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். மோடி வெறும் புழுதிக்காற்று. அந்த காற்றும் தற்போது அடங்கி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பலம் இல்லாத, வலுவிழந்த கட்டடமாக பா.ஜ.க. கூட்டணி இருக்கிறது. அதிலிருந்து சில செங்கல்கள் பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. எனவே, அந்த கட்டிடம் விரைவில் நொறுங்கி விடும்.
காங்கிரஸ் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன். திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும் நேரில் அழைப்பு விடுத்துள்ளேன்.
'கடந்த 2 மாதமாக மோடியின் அலங்கார பேச்சுக்கள் மக்களை கவலை அடைய வைத்துள்ளது. நாட்டில் மோடி அலையும் இல்லை. சுனாமியும் இல்லை. மோடி வெறும் புழுதிக்காற்று. அந்த காற்றும் தற்போது அடங்கி விட்டது.
ராகுல் காந்தியின் அமைதியான பேச்சு அவர் மீது மக்களுக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு தேர்தல் போன்று கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications