விமான நிலையங்களில் ஹேண்ட் பேக்குகளுக்கு இனி பாதுகாப்பு முத்திரை இருக்காது
டெல்லி, சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய 6 விமான நிலையங்களில் ஹேண்ட் பேக்குகளுக்கு பாதுகாப்பு முத்திரை பொருத்தப்படும் நடைமுறையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: விமானப் பயணங்களின்போது வழக்கமாக பின்பற்றப்படும் இரண்டு நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விமானங்களில் பயணிக்கும் பயணிகள் 7 கிலோ எடை வரை உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு அதிகமான எடையுள்ள பொருட்களை சரக்குப் பெட்டகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

இதில் கைகளில் கொண்டு செல்லப்படும் கைப்பைகள் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பு முத்திரை பொருத்தப்படும். இந்த நடைமுறையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய விமான நிலையங்களில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
மின்னணு முறையிலான பயண அனுமதி சீட்டுக்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி மின்னணு பயண அனுமதி சீட்டு, பயணிகள் செல்போனிற்கு சென்றுவிடும். இதனை விமான நிலையத்தில் காண்பித்தால், பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
விமான நிலைய அதிகாரிகள் அதனை ஸ்கேன் செய்த பிறகு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த இரு புதிய வசதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் ஓரிரு மாதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications