ஜெ. உடல்நிலையில் முன்னேற்றம்... இடைக்கால முதல்வர் தேவையே இல்லை: பொன்னையன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை இல்லை என்று அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூறியுள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

அதிமுக நிராகரிப்பு
இதனால் முக்கிய முடிவுகளை எடுக்க தற்காலிக முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கையை அதிமுக நிராகரித்துள்ளது.
அரசு நிர்வாகம்..
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன் இது தொடர்பாக கூறியதாவது:
தமிழகத்தில் அரசு நிர்வாகம் முறையாக செயல்பட்டு வருகிறது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் சாசனப்படி அமைக்கப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு உள்ளது.
இடைக்கால முதல்வர்...
அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் இன்றைய நிலையில் இடைக்கால முதல்வர் தேவை இல்லை.
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறி வருவது அவரது சொந்த கருத்து. தமிழகத்தில் அரசு நிர்வாகம் தங்கு தடையின்றி செயல்படுகிறது. ஆகையால் ஜனாதிபதி ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்பது தேவையில்லாதது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications