பாமகவைத் தவிர 'வேறு யாரும்' டெபாசிட் வாங்கக் கூடாது... ராமதாஸின் 'டபுள் மீனிங்' பேச்சு!
தர்மபுரி: பாமகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் டெபாசிட் கிடைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளார்.
அவர் சொன்னது என்னவோ அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி தொகுதியைக் குறித்துத்தான். ஆனால் டாக்டரின் பேச்சில், பாமகவினருக்கு ஒட்டுமொத்தமாக ஒரு மெசேஜை அவர் வைத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பெண்ணாகரத்தில் நடந்த பிரசாரத்தின்போது ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது...

கோடி கோடியாக சொத்து குவித்த ஜெயலலிதா
ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

பாடம் புகட்டுங்கள்
கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
பெண் முதல் அமைச்சர் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுக்கடைகளை தாராளமாக திறந்துவிட்டிருப்பதால், பெண்களுக்கான
எதிரான குற்றங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துவிட்டன.

ஊழலில் திளைக்கும் திமுக, அதிமுக
ஊழலில் திளைக்கும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தக்க பாடம் புகட்ட இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

டெபாசிட் வாங்கக் கூடாது
திமுகவும், அதிமுகவும் டெபாசிட் வாங்கக் கூடாது.

வேறு கட்சிகளும் வாங்கக் கூடாது
வேறு கட்சிகளும் வாங்கக் கூடாது. அன்புமணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் முன்னேறிய மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரியை மாற்றுவார் என்றார் ராமதாஸ்.
இதில் அவர் வேறு கட்சிகளும் என்று யாரையோ மனதில் வைத்து பாமகவினருக்கு மெஜேச் சொல்லியுள்ளதாக ஒரு உட்பொருள் எடுத்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications