யாரையும் கூட்டணியிலேயே இருங்கன்னு கட்டாயப்படுத்த முடியாது... தமிழிசையின் அந்தர்பல்டி
சென்னை: கூட்டணியை விட்டு செல்ல நினைப்பவர்களை கட்டுப்படுத்த முடியாது. இங்கேயே இ்ருங்க என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவைச் சேர்ந்த சமூக வலைதள ஆர்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "யாரையும் இந்தக் கூட்டணியில் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இன்று தமிழகம் இருக்கும் சூழலில் ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும்.
சிலர் கூட்டணியை விட்டு வெளியேறும் அதே நேரத்தில், பலர் கூட்டணிக்கு வரலாம். கூட்டணியில் ஏற்கனவே இருந்தவர்கள் உள்ளிட்ட எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு பயன்தரும் வலுவான கூட்டணி அமைக்கப்படும்" என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்தவரான விஜயகாந்த்துக்காக பாஜக கடுமையாக முயன்று வருகிறது. பாமக போனது பற்றிக் கூட பாஜக கவலைப்படவில்லை. ஆனால் விஜயகாந்த்துக்காக தவம் இருக்காத குறையாக கெஞ்சி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழிசையின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications