"புல்லட்-ப்ரூப்" கார்.. டெல்லியில் முதல்வர் ஸ்டாலினுக்காக பிரதமர் மோடி ஸ்பெஷல் ஏற்பாடா.. உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். முக்கியமான பல கோரிக்கைகளை, திட்டங்களை முன்வைத்து முதல்வரின் இந்த பயணம் அமைகிறது.

ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அதில் நீட் தேர்வு ரத்து மற்றும் வேக்சின் ஒதுக்கீடு பிரதான கோரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்

கார்

இந்த நிலையில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. முன்னதாக காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும் திமுக தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்த போது முதல்வர் கருணாநிதிக்கு இதேபோல் டெல்லியில் புல்லட்-ப்ரூப் கார் வழங்கப்படும். அதன்பின் 2011லும் இதேபோல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது முதல்வர் ஜெயலலிதாவிற்கு டெல்லியில் புல்லட்-ப்ரூப் கார் வழங்கப்பட்டது.

ஆனால்

ஆனால்

ஆனால் அதன்பின் முதல்வர்கள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்ற போது இது போன்ற புல்லட்-ப்ரூப் கார்கள் வழங்கப்படவில்லை. இவர்கள் இருவரும் டெல்லியில் தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திலும் கூட தங்கவில்லை. இந்த நிலையில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி வந்தன.

உண்மை என்ன

உண்மை என்ன

ஆனால் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் வழங்குவது குறித்து உண்மையில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது வரை போடப்பட்டு இருக்கும் திட்டங்களின்படி முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்துவார்.

அரசு வாகனம்

அரசு வாகனம்

அதே வாகனத்தில் இருந்துதான் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்திற்கும் செல்வார். முதல்வர் ஸ்டாலினுக்காக புல்லட்-ப்ரூப் கார் ஏற்பாடு செய்வது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக இணையத்தில் வெளியாகும் தகவல் பொய்யானது.

கூட்டணி ஆட்சி

கூட்டணி ஆட்சி

2011ல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தும், மாநிலத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு டெல்லியில் புல்லட்-ப்ரூப் கார் வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் அப்போது பெருந்தன்மையாக இந்த புல்லட்-ப்ரூப் ஏற்பாட்டை செய்து இருந்தார். அதேபோல் ஜெயலலிதாவிற்கு அப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+