கிருஷ்ணசாமி மருத்துவமனையில் இறந்ததால் பிரேத பரிசோதனை இல்லை : மருத்துவர்கள் தகவல்
கிருஷ்ணசாமி மருத்துவமனையில் இறந்ததால் பிரேத பரிசோதனை இல்லை என்று கேரள மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

எர்ணாகுளம் : நீட் தேர்வு எழுதுவதற்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து மகனை அழைத்து வந்த தந்தை மாரடைப்பால் மரணமடைந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை தேவை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்த நிலையில், தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்த மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் வந்திருந்த தந்தை கிருஷ்ணசாமிக்கு, மாணவன் தேர்வெழுத சென்ற நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தற்போது அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கபப்ட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை இறந்த விவகாரம் தேர்வெழுதிவிட்டு வந்த மாணவனுக்கு சொல்லப்பட்ட நிலையில், தற்போது தந்தையின் உடலைப்பார்க்க அவர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மாணவனின் தந்தை மருத்துவமனையில் இறந்ததால், பிரேத பரிசோதனை செய்யத் தேவை இல்லை என்று கேரள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவன் மற்றும் அவரது நெருங்கிய உறவினரின் கையெழுத்து பெற்ற பின், கிருஷ்ணசாமியின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், உடலை திருத்துறைப்பூண்டிக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications