நாங்களும் மனுசங்கதான்... எங்களையும் கொஞ்சம் கவனிங்க குமுறும் வடசென்னை மக்கள்
சென்னை: வட சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கூட வழங்கப்படாததால், அங்கே மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது. தண்டையார்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், வள்ளலார் நகர், கொடுங்கையூர் மற்றும் மின்ட் ஆகிய பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
40 மணிநேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. மீட்புப்பணிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தமிழக கடலோரக் காவல் குழும போலீஸார் முடிச்சூர் உள்ளிட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து இடைவிடாது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் 30 கமாண்டோ வீரர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெற்ற 15 பேர் கொண்ட குழுவினர் 6 படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்தியம் சார்பில் 3 மிதவை படகுடன் 17 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் சைதாப்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போலீஸாருடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்னையில் வெள்ளம் சூழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

விடிய விடிய மீட்பு
ஈக்காட்டுதாங்கல், கோட்டூர் புரம், சைதாப்பேட்டை, முடிச்சூர், தாம்பரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 750 பேர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 200 வீரர்கள் வேறு சில மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். 25 படகுகள், 30 தீயணைப்பு வாகனங்கள், 3 தண்ணீர் இரைக்கும் மோட்டார் பம்ப்புகள் கொண்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு
சென்னையைப் பொறுத்தவரையில், மழை வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியவர்களில் ஏறத்தாழ 2,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணிகள் தொடர்கிறது.

தவிக்கும் வடசென்னை
வட சென்னையின் பல பகுதிகளில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கப்படவில்லை. அத்தியாவசியப் பொருட்கள் கூட வழங்கப்படாததால், அங்கே மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது. தண்டையார்பேட்டை, சத்தியமூர்த்தி நகர், வள்ளலார் நகர், கொடுங்கையூர் மற்றும் மின்ட் ஆகிய பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

போக்குவரத்து துண்டிப்பு
இங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும், தண்ணீர் இல்லாத இடங்களைக் காண முடியவில்லை. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த சேவையும், இப்பகுதிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள், வள்ளலார் நகர் பாலத்தின் வழியாகச் செல்ல முயன்றதால், மின்ட் பாலம் வழியான போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோபம்
வள்ளலார் நகர் பாலத்தின் வழி துண்டிக்கப்பட்டதால், மக்கள் ஆத்திரமடைந்தனர். இது குறித்துப் பேசிய வட சென்னை மக்கள், "அரசாங்கத்தைப் பொறுத்தவரை, சென்னை போயஸ்கார்டனில் தொடங்கி, கோபாலபுரத்தில் முடிந்துவிடுகிறது. இதுவரைக்கும் நாங்கள் சென்னை குடிமக்களாகவே கருதப்படவில்லை என்று வடசென்னைவாசிகள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications