ஒரு "ரிப்பன்" கூட 'கட்' பண்ணாத ஓ.பன்னீர் செல்வம்... 'தியரி' மட்டும்தான், 'பிராக்டிகலே' இல்லை!!!!
சென்னை: முதல்வர் பதவியில் அமர்ந்து வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து விட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் ஒரு முதல்வராக அவர் பார்க்க வேண்டிய பல வேலைகளை இதுவரை அவர் செய்யவே இல்லை.
முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தது முதலே ஒரு சாதாரண அமைச்சரவை விடவும் படு நிதானமாக வேலை பார்த்து வருகிறார். அவர்தான் முதல்வர் என்றாலும் கூட இவரா முதல்வர் என்று அனைவரும் கேட்கும் அளவுக்கு ஆள் அரவமின்றி வேலை பார்த்து வருகிறார் பன்னீர் செல்வம்.
அடக்கமானவர், அமைதியானவர், அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர், நல்ல பெயர் பெற்றவர், நல்லவர், சாந்தமானவர் என்று என்னவெல்லாம் நல்ல வார்த்தைகள், பண்பான வார்த்தைகள் உள்ளதோ அத்தனைக்கும் தகுதியானவர்தான் நமது முதல்வர். ஆனால் அவரது கைகளைக் கட்டிப் போட்டு வைத்து அவருக்கு மட்டுமல்லாமல் அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கும் கூட களங்கத்தை ஏற்படுத்தி விளையாடிப் பார்தது வருகிறார்கள் சிலர்.

செப்டம்பரில் 2வது முறையாக
2வது முறையாக தமிழகத்தின் முதல்வராக செப்டம்பர் 29ம் தேதி பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம். இதற்கு முன்பு அவர் 2001ம் ஆண்டு முதல்வராக இருந்தார்.

50 நாட்கள் ஓவர்
முதல்வர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வம் வந்து 50 நாட்களாகி விட்டன.

புதுஸ்ஸா எதுவுமே இல்லை
முதல்வராக பதவியேற்ற பின்னர் கோட்டையை விட்டு வெளியே எங்குமே போவதில்லை முதல்வர். இடையில் மதுரைக்கு ஒருமுறை போய் வந்தார். தனது சொந்த ஊருக்கு ஒருமுறை போய் வந்தார். பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குப் போய் வந்தார். அவ்வளவுதான். மற்றபடி சென்னையை விட்டு அவர் நகர்வதே இல்லை.

திட்டங்கள் இல்லை
முதல்வரான பின்னர் எந்த ஒரு திட்டத்தையும் பன்னீர் செல்வம் அறிவிக்கவில்லை. எந்தத் திட்டப் பணியையும் அவர் தொடங்கி வைக்கவில்லை. எந்த ஒரு அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. அதாவது எதுவுமே நடக்கவில்லை என்பதே உண்மை.

அறிக்கைகள்
பெரும்பாலும் அறிக்கைகளை மட்டுமே முதல்வர் வெளியிடுகிறார். அதிலும் கூட பல இடங்களில் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, உத்தரவுப்படி, ஆலோசனைப்படி, முயற்சியின்படி என்ற வார்த்தைகளுடன்தான் அறிக்கைகள் வருகிறது. எனது அரசு என்று தப்பித் தவறிக் கூட அவர் கூறுவதில்லை.

அம்மா படம் இல்லாமல்
தலைமைச் செயலகத்தில் பல்வேறு தரப்பினர் வந்து அவரைச் சந்தித்தாலும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைத்தான் பிரதானமாக வைத்து அவர்களுடன் பேசவே ஆரம்பிக்கிறார் முதல்வர். படம் இல்லாமல் அவர் பேசுவது கூட கிடையாது.

தியரி மட்டும்தான்... பிராக்டிகலே இல்லை!
முதல்வரான பின்னர் இதுவரை ஒரு திட்டத்தையும் தொடங்கி வைக்காமல், வெறும் அறிக்கைகள், கோப்புகளில் கையெழுத்து என தியரிட்டிகலாகவே போய்க் கொண்டிருக்கிறது முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சி. எப்போது பிராக்டிகலுக்கு வருவார் அவர் என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர்.. கொட்டாவி விட்டபடி.!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications