அதிமுகவுக்கு ஆதரவு இல்லை... இரட்டை இலையில் போட்டியிட்டதால் அடிமையும் இல்லை... தமிமுன் அன்சாரி பொளேர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
நாகை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை, அதேவேளையில் கடந்த தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டதால் அடிமையும் இல்லை என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க
மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிகள் படைத் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு ஆகியோர் ஜெயலலிதாவிடம் அணுகினர்.

தினகரனுக்கு ஆதரவு
அப்போது கூட்டணிக்கு ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் அவர்கள் மூவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு பிறகு பிரிந்த அதிமுகவின் அணிகள் ஒன்றிணைந்தபோது இவர்கள் மூவரும் தினகரன் அணிக்கே ஆதரவாக இருந்து வந்தனர்.

அதிமுகவுக்கு ஆதரவு இல்லை
இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறுகையில், அதிமுகவுக்கு ஆர்.கே.நகர் தேர்தலில் ஆதரவு இல்லை.

தேர்தல் யுத்தி
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதிமுகவுக்கு அடிமை இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டது தேர்தல் யுத்திதான்.

கொள்ளைகள் உண்டு
மனிதநேய ஜனநாயக கட்சிக்கு என தனி கோட்பாடுகள், கொள்ளைகள் உள்ளன. எனவே அதிமுகவுக்கு எனது ஆதரவு நிச்சயம் இருக்காது என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications