சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்.. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
Recommended Video

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலின் சீற்றமும் அதிகரித்துள்ளது.

சுனாமி வதந்தியால் பீதி
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பேரலைகள் தாக்கப்போவதாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இந்த தகவலால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

சுனாமி எச்சரிக்கையில்லை
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜான்சிங் சவான் சுனாமி குறித்து பரவும் வதந்திகளை மறுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

வதந்திகளை நம்பவேண்டாம்
மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சுனாமி குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

நாகையில் பரவிய வதந்தி
அண்மையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கியிருப்பதாகவும், இதனால் அம்மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாவட்ட ஆட்சியர் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications