நன்றாக பொய் பேசுகிறார்.. ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.. முதல்வர் ஈபிஎஸ் தடாலடி
கோவில்பட்டி: பொய்கள் பேசுவதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் தெரிவித்துள்ளார்
கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால் தான் மாநிலங்களுக்கான திட்டங்கள் கிடைக்கும் என்றார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை என மு.க.ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தான் சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுவதாக கூறினார்.

அதேநேரம், இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, சிவகங்கை பாஜக வேட்பாளர் எச்ச ராஜாவுக்கு ஆதரவு திரட்டிய முதலமைச்சர் பழனிசாமி, தந்தையே தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத நிலையில், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications