ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு!!!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாளாகும். அத்தொகுதியில் வருகிற 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவர் மனு தாக்கல் செய்தார்.

தி.மு.க., பா.ம.க., த.மா.கா., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புறக்கணித்து விட்டன. தேமுதிக, பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகிறதா அல்லது தேர்தலை புறக்கணிக்கிறதா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க.வும் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுவது என்றும், அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 3 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாள் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
4 ஆம் தேதி 2வது நாள் ஒரு வேட்பாளர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. 5 ஆம் தேதி அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் அதிமுக மாற்று வேட்பாளராக மதுசூதனன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவர்.
6 ஆம் தேதி தமிழ் மாநில கட்சி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்பட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்,
நேற்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, நேற்று மாலை வரை 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா தவிர மற்ற 26 பேரும் சுயேச்சை வேட்பாளர்களாவர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் யாரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
நாளை (10ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 11 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 13 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்புமனு வாபஸ் பெறலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வருகிற 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 30 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications