முழு நேர ஊழியர்களாக அறிவிக்கக் கோரி போராட்டம்... சத்துணவு ஊழியர்கள் கைது
முழு நேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
திருநெல்வேலி: நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்களை முழு நேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானிய தொகையை உயர்த்த வேண்டும்; அரசு பணியில் காலியிடங்கள் அடிப்படையில் சத்துணவு பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில்
மறியல் போராட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராசையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோயில் பிள்ளை முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்களை உதவி கமிஷனர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இதே போல் தூத்துக்குடி பாளை ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பொன் சேகர் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 517 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications