வடகிழக்குப் பருவமழை அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம் - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தினால் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் அதிக அளவில் கொட்டித்தீர்த்தாலும் சில மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

சென்னை, நாகையில் வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்துள்ளது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவில்லை.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை அடுத்த வாரம் முதல் மீண்டும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னையில் இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
அடுத்தவாரம் முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்தது. மணிமுத்தாறில்10 செமீ மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 9 செ.மீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி 8 செமீ, சேரன்மாதேவி, நாகர்கோவில் மயிலாடியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications