வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம்.. தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நல்லா மழை பெய்யுமாம்
வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: குமரிக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கனமழை பெய்து பருவமழை வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. என்றாலும் 3 நாட்கள் மட்டுமே மழை பெய்தது. பின்னர் தமிழகம் முழுவதும் மழை எதுவும் பெரிய அளவில் இல்லை. மாறாக பனி பெய்து குளிரத் தொடங்கியது. மேலும், வழக்கைத்தைவிட 68 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், குமரிக் கடலில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதை அடுத்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறி தற்போது குமரிக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களைப் பொருத்தவரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். தென் மாவட்ட கடலோரப் பகுதியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் 50 மிமீ மழையும், பாம்பன், தேவக்கோட்டை, ஆயக்குடி ஆகிய இடங்களில் 30 மிமீ மழையும், தென்காசி, ராமேஸ்வரம், செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் 20மிமீ மழையும், சிவகாசி, திருவாடணை, பேராவூரணி, கமுதி, கடலூர், சென்னை சத்தியபாமா பல்கலைக் கழகம், ஆர்எஸ் மங்கலம், இளையான்குடி, போடிநாயக்கனூர், சங்கரன்கோயில் ஆகிய இடங்களில் 10 மிமீ மழையும் பெய்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications