ஜில்லென்ற சாரலுடன் தொடங்கியது வடகிழக்கு பருவ மழை... !
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் சாரல் மழையுடன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பருவமழை தொடங்கியுள்ளதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நடப்பாண்டில், தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் வலுவடைந்துள்ளன. 'வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்குப் பருவமழை 28ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது

மழை தொடங்கியது
இலங்கை அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவில் சாரல் மழை பெய்தது. அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள்
தஞ்சை திருவையாறு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று மதியம் முதலே விட்டுவிட்டு மழை பெய்தது. இதே போல், மேட்டூரில் இரவு முழுதும் மழை பெய்தது.

கனமழை
கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள காவேரிப்பட்டினம், பர்கூர், வேப்பனஹள்ளி உட்பட பல்வேறு இடங்களில் நேற்றிரவு கனமழை பெய்தது. கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தமிழக அரசு தயார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையிலுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆய்வு
என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். அதில், மாநில நிவாரண ஆணையர், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அவசர கட்டுப்பாட்டு மையம்
மழை பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications