தென் மாவட்டங்களில் கனமழை… வடகிழக்குப் பருவமழை தாமதம்… ரமணன் தகவல்
சென்னை: வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி காரணதாக அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று அதிக பட்சமாக விருதுநகர் மாவட்டம் வந்திராய் இருப்பு மற்றும் பொள்ளாச்சியில் 10 செ.மீ மழையும், தங்கச்சி மடம் 9 செ.மீ, சிவகாசி, பாம்பன் தலா 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மேல் அடுக்கு சுழற்சி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கை மீது நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவடையவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறது'' என்றார். வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார் ரமணன்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications