தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் துவங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாட்களில் துவங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால் தான் அதிக பலன். தமிழகம் தவிர ஆந்திராவுக்கும் வடகிழக்கு பருவமழையால் தான் பலன். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும் சரி, வடகிழக்கு பருவமழையும் சரி எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் அவ்வளவாக பெய்யவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தை விட 15 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழையின் அளவை வைத்தே வடகிழக்கு பருவமழையின் அளவு கணக்கிடப்படும்.

இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் துவங்கும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் இறுதி வரை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications