இதப்பாருங்க.. சேலம்-சென்னை மட்டுமில்லையாம்.. இன்னும் 8 பசுமை வழி சாலை தமிழகத்திற்கு வருகிறதாம்!
சேலம் - சென்னை பசுமை வழி சாலையை போலவே தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பிரதியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட உள்ளது.
Recommended Video

சென்னை: சேலம் - சென்னை பசுமை வழி சாலையை போலவே தமிழகம் முழுக்க இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பிரதியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட உள்ளது.
சேலம் - சென்னை 8 வழி சாலை அமைக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த சாலைக்கு எதிராக போராடி வரும் மக்கள் இதனால் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சாலை போடப்படும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்தே மக்கள் இதற்கு எதிராக போராடி வருகிறார்கள்.
இந்த சாலையால் பல ஆயிரக்கணக்காக விளை நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் இன்னும் கூடுதலாக 8 பசுமை வழி சாலைகள் போடப்பட உள்ளது.

இந்தியா மொத்தமும்
இந்தியா முழுக்க பல இடங்களில் இதுபோல பசுமை வழி சாலை போடப்பட இருக்கிறது. இதற்காக மொத்தமாக ரூபாய்.43,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சேலம் சென்னை சாலையை சேர்த்து மொத்தம் 9 சாலை திட்டங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 570 கிலோ மீட்டருக்க்கு புதிய சாலைகள் போடப்பட உள்ளது.

திட்டங்கள்
அதன்படி, சென்னை - சேலம், மேலூர் -திருப்பத்தூர் - புதுக்கோட்டை - தஞ்சாவூர், கரூர் - கோயம்புத்தூர், கும்பகோணம் -சீர்காழி, மஹாபலிபுரம் - பாண்டிச்சேரி, திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - தனுஷ்கோடி (பாம்மபனில் புதிய பாலம்), சென்னை - சித்தூர், சென்னை - ஓசூர் ஆகிய 9 திட்டங்கள் மொத்தம் தமிழகத்தில் வர இருக்கிறது.

ஏற்கனவே தொடங்கிவிட்டது
கடந்த பிப்ரவரி மாதமே இந்த சாலைகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது. மத்திய அரசின் பாரத்மாலா பிரதியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை போடப்பட உள்ளது. இதற்கான பணிகளும் சத்தமில்லாமல் தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான சர்வே பணிகள் தற்போது பல மாவட்டங்களில் நடந்து கொண்டு இருக்கிறது.

கண்டிப்பாக விவசாய நிலம்
இதில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால், இதற்காக அதிக அளவில் விவசாய நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. விவசாய நிலங்களில், மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் திட்டத்தை எளிதாக குறைந்த செலவில் முடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ்மினிட்
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications