பணத் தட்டுப்பாடு நிலைமை டிச.30-க்கு பிறகும் தீராது.. அடித்து சொல்கிறார் ராகுல் !
வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் ஏற்பட்டிருக்கும் பணத் தட்டுப்பாடு டிசம்பர் 30-ந்தேதிக்கு பின்னரும் தொடரும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் ஏற்பட்டிருக்கும் பணத் தட்டுப்பாடு டிசம்பர் 30-ந்தேதிக்கு பின்னரும் தொடரும் என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இன்னும் ஏழு மாதங்கள் ஆனாலும் பணத் தட்டுப்பாடு நிலைமை சீராகாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணம், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக மத்திய அரசு கூறியது.

இதனால் அந்த பணத்தை வங்கிகளில் பொதுமக்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். இதனிடையே போதுமான பணம் அச்சிடாததால் பணத்தட்டுபாடு நிலவி கருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து கிட்டதட்ட 50 வது நாளை எட்டவுள்ளது. பணத்தை மாற்றிக் கொள்ளவதற்கான காலக்கெடு வரும் 30-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அந்நாளில் இருந்தே பணத்தட்டுப்பாடு பிரச்சினை தீர்ந்து விடும் என்று பிரமதர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 30-ந் தேதியோடு பணத்தட்டுப்பாடு முடிவுக்கு வராது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இகுறித்து அவர் கூறுகையில், டிசம்பர் 30-ந் தேதிக்குப் பிறகும் பணத் தட்டுப்பாடு பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் தட்டுப்பாடு 30-ந் தேதியோடு முடிந்து விடாது என்பதை என்னால் உறுதியோடு சொல்ல முடியும். இந்த கடினமான சூழ்நிலை அடுத்த 7 மாதங்களுக்கும் மேல் அல்லது அதற்கு மேலாகவும் நீடிக்கும்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு ஊழலுக்கு எதிரானதல்ல. இதனால் பொருளாதாரம் முடங்கியுள்ளது. கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல. ஏழை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரானது. ரூபாய் நோட்டு ஒழிப்பால் 99 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications