For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தாளர் ஜெயகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Noted writer Jayakanthan hospitalized
சென்னை: ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜே.கே என்று அழைக்கப்படும் ஜெயகாந்தன் 80 வயது நிரம்பியவர். 1950-ஆம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

கடந்த 3 மாதகாலமாக அவ்வப்போது அவருக்கு நினைவு தவறி வந்ததாகவும், தற்போது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

40 நாவல்கள், 23 சிறுகதைகளை எழுதியுள்ளார் ஜெயகாந்தன். சாகித்ய அகாதமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு கடந்த 2002- ஆம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. 2009- ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

English summary
Writer and Jnanpith awardee D Jayakanthan has been admitted to a private hospital in the city after he developed uneasiness. Sources said his condition has improved and he is not in intensive care. The 80-year-old writer was unwell for the past few days. Doctors said he had revived and is under observation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X