விவசாயத் தொழிலாளர்களை ஏமாற்றிய பட்ஜெட்… முத்தரசன் குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இன்று காலை 10.30 மணிக்கு சட்டசபையில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார். புதிய வரிகள் எதுவும் இல்லாத இந்த பட்ஜெட்டுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Nothing in budget for farmers, says Mutharasan

பட்ஜெட் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்களை உயர்த்த தமிழக பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் 200 நாளாக அது உயர்த்தப்பட வேண்டும் என்றும் முத்தரசன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nothing in TN budget 2017-18 for farmers, says CPI leader Mutharasan.
Please Wait while comments are loading...