Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலில் எதுவும் நடக்கலாம்.. டிடிவி தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பால் பாதிப்பு இல்லை.. வைகை செல்வன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், இவர்களது சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஒ பன்னீர் செல்வம் ஒருபக்கம் சட்ட போராட்டங்களை நடத்திக்கொண்டே மற்றொரு பக்கம் மக்கள் மன்றத்தில் நாங்கள்தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் எனக் கூறி வருகிறார். இதன்படி திருச்சியில் அண்மையில் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.

Nothing to happen -Aiadmk former Minister vaigai selvan says about OPS- TTV Dhinakaran Meet

அதேபோல், கொங்கு மண்டலம் உள்பட 5 இடங்களில் ஓ பன்னீர் செல்வம் மாநாடு நடத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்தார். டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொது ஓ பன்னீர் செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்ட்டி ராமச்சந்திரனுன் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிடிவி தினகரன் கூறுகையில், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும்.

அதை கபளீகரம் செய்து பணபலம் ஆணவத்தோடு செயல்படுவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து தீயசக்தி திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நானும் ஓபிஸ்சும் இணைந்து இருக்கிறோம்" என்றார்.

அதேபோல், ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், " எப்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்திக்க உள்ளீர்கள் என்றே இதுவரை பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தச் சூழலில் டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். சசிகலாவைச் சந்திப்பது குறித்தும் கேட்டிருந்தோம். அவர் வெளியூரில் இருப்பதால் வந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். வந்தவுடன் நிச்சயம் சந்திப்போம்" என்றார்

ஓ பன்னீர் செல்வம் - டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக டிடிவி தினகரனை - ஓபிஸ் சந்தித்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறியதாவது:-

Nothing to happen -Aiadmk former Minister vaigai selvan says about OPS- TTV Dhinakaran Meet

அதிமுக சரியான பாதையில்நேரான பாதியில் தெளிவான பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறது. தொடர்நது சட்டபோராட்டத்திலும் நிலைப்பாடுகளில் ஓபிஸ் தோல்வி அடைந்தார். அமமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் சாரை சாரையாக தாய்கழக்த்தில் இணைந்து வருகிறர்கள்.

இப்படிப்பட்ட வேளையில் தான் இருவரும் சந்தித்துள்ளார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம். தர்மயுத்தம் வேண்டும் என்று போராடியவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பால் அதிமுகவிற்கு எந்த பின்னடைவும் இல்லை. வாக்கு வங்கிக்கு எந்த சேதரமும் ஏறப்ட போவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+