'மக்கள் முதல்வர்' பாணியில் "மனிதர்களின் முதல்வர்" மு.க.ஸ்டாலின்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'மக்களின் முதல்வர்', ''மக்களின் தலைமை செயலாளர்', 'மக்களின் ஆலோசகர்' வரிசையில் தற்போது அரசியல் களத்துக்கு 'மனிதர்களின் முதல்வர்' பதவி களமிறக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை அவர் இழக்க நேரிட்டது.

Now MK Stalin as

அப்போது ஜெயலலிதாவுக்கு 'ஜெயா' தொலைக்காட்சி கொடுத்த அடைமொழிதான் 'மக்களின் முதல்வர்'. தமிழகத்தின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்ற பின்னரும் கூட அண்ணா தி.மு.க.வினருக்கு 'மக்கள் முதல்வர்' ஜெயலலிதாவுக்கே முன்னுரிமை. முதலமைச்சராக இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சர், அண்ணா தி.மு.க.வின் பொருளாளர் என்ற நிலைதான்..

இதனால் ஜெயலலிதா, மக்களின் முதல்வர் எனில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களின் முதல்வர் இல்லையா? என்ற கேள்வியை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பியிருந்தன.

'குற்றவாளி' மக்களின் முதல்வர் என்றால் பன்னீர் செல்வம் யாருக்கு முதல்வர்? என்று கடுமையாகக் கேட்டிருந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

தற்போது தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு "மனிதர்களின் முதல்வர்" என புதுப் பட்டம் சூட்டியிருக்கிறது தூத்துக்குடி தி.மு.க.

இன்னும் என்னென்ன பட்டம் வருமோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+