உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி - சீமான்
ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமான், அமீர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரடப்பட்ட வழக்கில் அவர்கள் ஆஜராகாததால் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர்கள் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு ஆஜரானார்கள். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர் சோமசுந்தரம் மனு அளித்தார். இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற 30க்தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சீமான் பேசினார். அப்போது அவர், தமிழகத்தின் ஒவ்வொரு ஜீவாதார பிரச்சனைக்கும் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளோம். மத்திய அரசு தமிழர்களின் பல்வேறு பிரச்சனைகளில் நேரடியாக தலையிட்டு தீர்த்து வைக்க முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
மற்ற மாநிலங்களில் எதிர்பாராத விபத்துக்களில் பொதுமக்கள் பலியானால் கூட அங்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் கூறி அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோதும் இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு சிறைபிடித்து அவற்றை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று இலங்கையை சேர்ந்த அமைச்சர் பேசியபோதும் அதற்கு மத்திய அரசோ, பிரதமர் மோடியோ பதில் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
தற்போது காவிரி பிரச்சனையில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரச்சனையிலும் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இவ்வாறு தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வு காண வேண்டியுள்ளது.
இனிமேலாவது தமிழக மக்களையும், தமிழக மீனவர்களையும் இந்திய மக்களாக கருதி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எ
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications