திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர்- மதிமுகவினர் அடிதடி.. சரமாரியாக தாக்கிகொண்டதால் பதற்றம்!
திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
Recommended Video

திருச்சி: விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினரும் மதிமுகவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிகொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சிக்கும் மதிமுகவுக்கும் இடையே ஏற்கனவே ஏழாம் பொருத்தமாக உள்ளது. வைகோவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மீம்ஸ் விவகாரத்தில் மதிமுக தரப்பில் இதுவரை இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளது. இதனால் இருகட்சியினரும் கடந்த சில மாதங்களாக எலியும் பூனையுமாக உள்ளனர்.

ஒரே விமானத்தில்
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை திருச்சி வந்தனர். இருவரும் ஒரே விமானத்தில் வந்தனர்.

போட்டி போட்டு கோஷம்
இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். இரு கட்சி தொண்டர்களும் வாழ்த்து கோஷம் எழுப்பும்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வாழ்த்து கோஷம் எழுப்பினர்.

கைகலப்பாக மாறியது
இரு கட்சி தொண்டர்களுக்கு இடையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. ஒருவருக்கொருவர் கொடிக்கம்பத்தை கொண்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

பெரும் பதற்றம்
இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த திடீர் மோதலால் விமான நிலைய பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications