கொலையாளியை படம் எடுத்தவர்கள் தெரிவியுங்கள்... சுவாதி குடும்பத்தினர் வேண்டுகோள்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலையாளி வெட்டும் போது பொதுமக்கள் யாரேனும் கொலையாளியை புகைப்படம் எடுத்திருந்தால் அதனை போலீசாரிடம் தயவு கூர்ந்து அளிக்க வேண்டும் என சுவாதி குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை மின்சார ரயிலுக்காக காத்திருந்த சூளைமேட்டைச் சேர்ந்த இளம் பெண் பொறியாளர் சுவாதி, மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காலை 6.30 மணி அளவில் நிகழ்ந்த இந்த கொலை, பொது மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாதி படுகொலை தொடர்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான இளைஞரின் படத்தை கொண்டு ரயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, சுவாதி படுகொலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் பின்னணி தகவல் சுவாதியின் குடும்பத்தினரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. சுவாதியின் நடத்தையைப் பற்றி தவறாக செய்தி வெளியிட வேண்டாம் என்று அவரது தந்தை வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் சுவாதியின் சித்தப்பத கோவிந்தராஜன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். இது ஜாதி, அரசியல், மதம் சம்பந்தப்பட்ட கொலை அல்ல என்று கூறினார்.
எங்களது குழந்தை குறித்து எங்களுக்கு நன்கு தெரியும். தயவு செய்து சுவாதி குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அது அவளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும். பொதுமக்கள் யாரேனும் கொலையாளியை புகைப்படம் எடுத்திருந்தாலோ, நேரில் பார்த்திருந்தாலோ போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் இந்த வழக்குக்கு உறுதுணையாக இருக்கும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications