செல்போனில் கோபமாக பேசிவிட்டு விடுதி மாடியில் இருந்து குதித்து நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை
சென்னை: சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள கே.கே. நகரைச் சேர்ந்த பத்மராஜ் என்பவரின் மகள் பவித்ரா(17). அவர் சென்னை பெரம்பூர் பெரவள்ளூரில் இருக்கும் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அந்த கல்லூரி மாணவிகள் பலர் சென்னையை அடுத்து உள்ள புழல் விநாயகபுரம் கே.வி.ஆர். நகரில் இருக்கும் 3 அடுக்குமாடி விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். பவித்ராவும் அந்த விடுதியல் தங்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்த பவித்ரா செல்போனை எடுத்துக் கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் யாருடனோ செல்போனில் நெடுநேரம் பேசியுள்ளார். பேசிக் கொண்டிருக்கையிலேயே இணைப்பை துண்டித்த அவர் கோபத்தில் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த பவித்ரா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிர் இழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தி வருகிறார்கள். அவர் யாருடன் போனில் பேசினார், காதல் விவகாரமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!












Click it and Unblock the Notifications