ரயிலில் அடிபட்டு இறந்து போன நர்சிங் மாணவி - தற்கொலையா என விசாரணை
அரியலூர்: அரியலூரில் நர்சிங் படித்துவந்த மாணவி ஒருவர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் அருகேயுள்ள இலுப்பூர் ரயில்வே கேட் அருகில் இலுப்பையூரை சேர்ந்தவர் கௌசல்யா என்ற நர்சிங் மாணவி.இவர் வியாழக்கிழமை அன்று இரவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை நேற்றுக் காலை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த அரியலூர் ரயில்வே போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறுதலாக அடிபட்டு இறந்தாரா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. உயிரிழந்த கௌசல்யா சென்னையில் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications