ஓரிரு நாளில் ஒன்று கூடுவோம்.. சேதி சொன்ன ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்ற அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணையப் போவதாக கடந்த 2 நாட்களாகவே பரபரப்பு கிளம்பிய நிலையில், முதல்வர் பழனிசாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி ஜெயலலிதா சமாதிக்கு வந்து அணிகள் இணைப்பு குறித்து அறிவிக்கப்போவதாக நேற்று மாலை செய்திகள் பரவின.

இதற்கு ஏற்றாற்போல ஜெயலலிதாவின் சமாதியும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. எனினும் அணிகள் இணைப்பு நடப்பதில் இழுபறி ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்.
எந்த கருத்து வேறுபாடும் அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா, எம்ஜிஆர் வளர்த்த கட்சியை பலப்படுத்த அதிமுக ஒன்றினைந்து செயல்படும். தமிழக மக்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications