தலித் பூசாரி தற்கொலை விவகாரம்: நிதியமைச்சர் ஓ.பி.எஸ்.-ன் தம்பி ராஜா வீட்டில் ரெய்டு?
பெரியகுளம்: தலித் பூசாரி தற்கொலை வழக்கில் சிக்கி தனது பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிதியமைச்சர் ஓ.பி.எஸ்.-ன் சகோதரர் ராஜா வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், தற்போதைய நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த நாகமுத்து என்பவர் தற்கொலை செய்து கொண்டார். நாகமுத்து தலித் இனத்தைச் சேர்ந்தவர். பூசாரி நாகமுத்து கடைசியாக எழுதிய கடிதத்தில் ஓ.பி.எஸ். தம்பி ராஜாவின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. இது தவிர அதிகாரிகளை மிரட்டுவது, வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் ராஜா மீது கூறப்பட்டது.
தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தனது பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. தலித் பூசாரியான நாகமுத்து தற்கொலை வழக்கில் நேற்று ராஜா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், அவரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக காவல்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்றிரவு பெரியகுளத்தில் உள்ள ராஜாவின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ். மற்றும் ராஜாவின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்ற போதும், பெரியகுளத்தில் இந்த ரெய்டு செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications