குடியரசு தினத்தன்று கோட்டையில் தேசிய கொடியேற்றும் முதலாவது முதல்வர் ஓபிஎஸ்!
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நாளை குடியரசு தின நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய கொடியேற்ற உள்ளார். இதனால் கோட்டையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தேசிய கொடியேற்றி வைக்க உள்ளார்.
சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர்கள்தான் தேசியக் கொடியேற்றுவது நடைமுறை. ஆனால் இந்த ஆண்டு நாளைய குடியரசு தின நாளில் கோட்டையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடியேற்ற உள்ளார்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் ஆளுநர்கள் கொடியேற்றுவது நடைமுறையாக இருந்து வந்தது. 1974-ம் ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் கொடியேற்றும் நடைமுறை உருவானது.

இந்த நடைமுறை உருவாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கிறார் வித்யாசகர் ராவ்.
அவர் மகாராஷ்டிரா மாநில முழு நேர ஆளுநர் என்பதால் அம்மாநிலத்தில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கொடியேற்ற உள்ளார். இதனால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் குடியரசு தினமான நாளை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
தமிழகத்தில் குடியரசு தின நாளன்று கொடியேற்றும் முதலாவது முதல்வர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற உள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications