ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஓபிஎஸ்தான்!- நடிகர் தீபன் பேட்டி
சென்னை: அதிமுகவுக்கு ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்தான் என்று ஜானகி எம்ஜிஆரின் உறவினரும் நடிகருமான தீபன் (முதல் மரியாதை படத்தில் நடித்தவர்) கூறினார்.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.

ஜானகி எம்ஜிஆர் உறவினரும் நடிகருமான தீபன் கூறுகையில், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் என்றைக்கும் அழியாது. இன்றைக்கு அவருடைய நினைவுதினத்தில் அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். வருகிற 17ம் தேதி புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், பாரதபிரதமர் மோடி ஆகியோருக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறோம். அண்ணா நூற்றாண்டு விழா நேரத்தில் மத்திய அரசு ஒரு காயின் ரிலீஸ் செய்தார்கள். அதைப்போலவே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவுக்காக ஒரு காயின் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அந்த நல்ல செய்தி எப்போது வேண்டுமானாலும் வரும், நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஜெயலலிதா அம்மா இருந்தபோது விழாவை சிறப்பாக நடத்துகிறேன் என்று சொல்லியிருந்தார் அவர் இப்போது இல்லை. ஆனால், அவரால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராகியிருக்கிறார். அவர் தலைமையில் இந்த விழாவை சிறப்பாக நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.

புரட்சித் தலைவருக்கு பிறகு எப்படி மக்கள் ஜெயலலிதா அம்மாவை ஏற்றுக் கொண்டார்களோ அதைப்போலவே அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இப்போது முதல்வராக இருப்பதுபோல கட்சியையும் வழி நடத்தவேண்டும். அவருக்கு மட்டும்தான் அந்த திறமை இருக்கிறது. அவரோடு நாம் எல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications