ஆளுநருடன் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் சந்திப்பு! பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரினார்!!
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓபிஎஸ் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்து சட்டசபையில் தமக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடிக்கிறது. முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான காபந்து அரசாங்கமே நீடித்து வருகிறது.

முதல்வர் ஓபிஎஸ் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்யவைக்கப்பட்டதால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோருகிறார், அதிமுகவின் மற்றொரு அணியோ முதலில் சசிகலாவை முதல்வராக முன்னிறுத்தியது.
ஆனால் சசிகலா சிறைக்குப் போக நேரிட்டதால் இப்பொழுது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்துகிறது. அதிமுகவுக்குள் தொடரும் இந்த குழப்பத்தால் ஆளுநர் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அணியினரை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் நேரில் அழைத்து ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பின் போது தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தர வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தினார். முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பொன்னையன் உள்ளிட்டோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications