அதிமுக அணிகள் இணைப்பில் மோடி நல்லெண்ணத்தோடு செயல்பட்டார் - ஓபிஎஸ்
அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் இணைவது நல்லது என்றார். அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.
Recommended Video

சென்னை: பிளவு பட்ட அதிமுக இணைய வேண்டும் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி ஆலோசனை கூறினார் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதாகவும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கான ஆளுமையும் தகுதியும் அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தியே முதல்வர் பதவியை ஏற்க கூறினர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளில் திறன்பட கையாண்டு சிறப்பாக ஆட்சி நடத்தினேன்.

கட்டாய பதவி விலகல்
சிறப்பாக ஆட்சி நடத்தியை பொறுக்க முடியாமல் பதவி விலகுமாறு சசிகலா கூறினார். கட்டாயத்தின் பேரிலேயே முதல்வராக பதவியேற்றேன். கட்டாயத்தின் பேரிலேயே பதவியும் விலகினேன்.

அணிகளுக்குள் பிளவு
டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏக்கள் ஆத்ரவுடன் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறாராமே என பிரதமர் கேட்டதற்கு ஆம் என்றேன். அ.தி.மு.கவில் தினகரன் சர்வாதிகார போக்கை கையாண்டதால் அணிகளில் பிளவு ஏற்பட்டது.

பிரதமர் மோடி இணைப்பு பேச்சு
அணிகள் இணைவது குறித்து பிரதமரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் இணைவது நல்லது என்றார். அணிகள் இணைப்பு குறித்து பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன். நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் பிரதமர் மோடி ஆலோசனை கூறினார்.

கருத்து வேறுபாடு இல்லை
அதிமுக இணைப்பு பற்றி இத்தனை மாதங்கள் கழித்து ஒ.பன்னீர் செல்வம் கருத்து கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் நிலைப்பாடு
பாஜகவுடன் கூட்டணி எதுவுமில்லை. ஆர்.கே. நகர் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டதே இதற்கு உதாரணம். எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா விரும்பினாரோ அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். அதே நிலைப்பாடுடன்தான் இப்போதும் இருக்கிறோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications