டெல்லியில் கனமா கிடைக்கும்னு போய் ஏமாந்து திரும்பிய தேமுதிக: ஓ.பி.எஸ். தாக்கு

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வெங்கடேசன், இந்த அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்று வதில்லை. திருக்கோவிலூர் பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பாக 10 முறை கோரிக்கை வைத்து விட்டேன். எதுவும் நடைபெறவில்லை. எங்களது எல்லா கோரிக்கைகளும் கிடப்பில் போடப்படுகிறது. எதற்கும் நிதியும் ஒதுக்குவதில்லை. நாங்கள் கோரிக்கை வைத்தால் செய்வதில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் நத்தம் விசுவநாதன், எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற நிதி தேவை. அண்மையில் டெல்லி சென்று நீங்கள் எல்லோரும் பிரதமரை சந்தித்தீர்கள். அப்போது பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி கொடுங்கள் என்று ஏன் கேட்கவில்லை. அதை விட்டு விட்டு வேறு ஏதோபேசி இருக்கிறீர்கள். டெல்லியில் கூட்டணி பேசி தோல்வியடைந்து வந்திருக்கிறீர்கள் என்றார்.
அத்துடன் அமைச்சர் கே.பி.முனுசாமி எழுந்து, இவர்கள் நிதி கேட்டு இருந்தாலும் தமிழக அரசுக்காக கேட்டிருக்க மாட்டார்கள். வேறு எதற்கோ கேட்டு இருப்பார்கள். இங்கு இவர்கள் பேசுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் உள்ளது என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தேமுதிகவின் மோகன்ராஜ் எழுந்து, இன்று தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது தமிழ்நாடு முழுவதும் பேச்சாக உள்ளது என்றார்.
இதை மறுத்த அமைச்சர் வைத்திலிங்கம், எங்க அம்மா கூட்டணி பற்றி கவலைபடுவதில்லை. அவர் கூட்டணி இல்லாமலேயே தேர்தலை சந்திக்கும் வல்லமை படைத்தவர். ஆனால் கூட்டணி விஷயத்தில் நீங்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் என்பது பத்திரிகைகளில் பார்த்தால் தெரிகிறது என்றார்.
அதேபோல் நிதி அமைச்சர் ஒ. பன்னீர் செல்வமும் தம் பங்குக்கு பிரதமரை தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர். தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, மின்சார பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று இங்கு பேசுபவர்கள் அதற்கு தேவையான நிதியை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று பிரதமரிடம் சொன்னார்களா? இயற்கை இடர்பாடு ஏற்படும் நேரங்களில் ஜெயலலிதா டெல்லியில் நிதி கேட்டும் அவர்கள் தருவதில்லை. தமிழகத்திற்கு தேவையான மானியங்களும் தருவதில்லை. தே.மு.தி.க.வினர் டெல்லி போனார்கள். ஏதோ பேசினார்கள். கனமாக கிடைக்கும் என்று சென்றவர்கள் ஏமாந்து குழப்பத்தோடு திரும்பி வந்துள்ளனர் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications