ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்திற்கு அமோக வரவேற்பு.. தொண்டர்கள் கூட்டத்தால் அதிர்ந்த ஆர்.கே.நகர்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரளான தொண்டர்களை பார்த்த ஓ.பி.எஸ் குஷியாகியுள்ளது.
அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவான பிறகு குலதெய்வக் கோவிலுக்கு வழிபட சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார் ஓபிஎஸ். ஆண்டாள் கோவில், குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் சொந்த ஊருக்கு சென்றார்.
ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். ஏராளமான வாகனங்களில் அவருடைய ஆதரவாளர்கள் அணிவகுத்து சென்றனர்.

தேனியில் தொண்டர் கூட்டம்
ஓபிஎஸ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்துக்கு வந்த போதும் இவ்வளவு வாகனங்கள் அவருடன் அணிவகுத்து வந்தது கிடையாது. மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்கு வந்த நாட்களில் கூட இவ்வளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது இல்லை. ஆனால் சசிகலாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கிய பிறகு ஆதரவு அதிகரித்து காணப்பட்டது.

திறந்த ஜீப்
அதேபோல ஆர்.கே.நகரிலும் இன்று மக்கள் அலை, அலையாய் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மதுசூதனனுடன், பன்னீர் செல்வம் திறநத் ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். மேள தாளங்கள் முழங்க திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர்.

ஆர்.கே.நகருடன் நெருக்கம்
வர்தா புயல் சேத காலகட்டத்தில் ஆர்.கே.நகர் உள்ளிட்டசென்னையின் பல பகுதிகள் சேதமடைந்தன. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சிறப்பான வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனால் அவர் மீது ஆர்.கே.நகர் மக்களுக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உள்ளது. மேலும், மதுசூதனன் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதால், தொண்டர் பலமும் அதிகம் காணப்படுகிறது.

கூட்டமோ கூட்டம்
டிடிவி தினகரன், கங்கை அமரன் பிரசாரங்களின்போது இல்லாத அளவுக்கு பெருமளவில் திரளாக மக்கள் கூட்டம் கூடியிருந்ததை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. தோல்வி பயத்தால், இரட்டை மின் விளக்கு சின்னத்திற்கு எதிராக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியின்போது தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications