ஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரோசைய்யா!!
சென்னை: அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வத்தை தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ரோசைய்யா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால் தமது பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக சட்டமன்றத்தின் குழுவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாலை 6 மணி வரை காத்திருந்தார். பின்னர் ராகு காலம் முடிந்து 6.05 மணிக்கு அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் ஆளுநரை சந்திக்க சென்றனர்.
அங்கு ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை அவரிடம் ஒப்படைத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அத்துடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஆளுநர் ரோசைய்யாவிடம் கையளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் மாளிகையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications