கருணாஸிடம் சிக்கியுள்ள "ஆதாரம்" இதுதான்.. ஓ.எஸ்.மணியன் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Recommended Video

சென்னை: கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் மட்டுமே கருணாஸிடம் உள்ளது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதில் முதல்வராக பதவியேற்க இருந்த சசிகலா தங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் விலை போய்விடுவர் என்ற அச்சத்தின் காரணமாக அவர்களை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார்.
இதன் பின்னர் நடந்தது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் கூவத்தூரில் இருந்து எம்எல்ஏக்கள் யாரும் வெளியே போகாதவாறு அவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாரி இறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருணாஸ் மிரட்டல்
இந்நிலையில் கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது இந்த கருணாஸ் இல்லாமல் அதிமுக அரசாங்கம் அமைந்திருக்குமா என்று அரசிடம் கருணாஸ் கேட்டிருந்தார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்குவது முதல் அவர்களுக்கு தேவையான "சகல" வசதிகளையும் செய்து கொடுத்தவர் கருணாஸ் என்று கூறப்படுகிறது.

வழக்கு தொடுக்க
இதனால் அவர் பண பேரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்களை வீடியோவாக எடுத்து வைத்திருக்கலாம் என்றும் அதை வைத்து அரசை உரசி பார்க்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அரசோ இந்த ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க அவர் மீது வழக்குகளை தொடுப்பதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

திடுக் பதில்கள்
இந்நிலையில் கருணாஸ் கூவத்தூர் விவகாரத்தை கையில் எடுக்க காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் ஓ.எஸ் மணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் திடுக்கிடும் பதில்களை கூறியுள்ளார்.

மாநில அரசு
இதுகுறித்து அவர் கூறுகையில் கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் மட்டுமே கருணாஸிடம் உள்ளது. மக்கள் விரோத திட்டங்களுக்கு அரசு இதுவரை எந்த அனுமதியும் வழங்கியதில்லை. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மட்டுமில்லை இவர்களும் இட்லியைதான் சாப்பிட்டார்கள் போலும்!
{document1}
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications