ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல: மறுக்கும் நடிகை சரிதா நாயர்!
கோவை: சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டு வரும் ஆபாச படங்களில் உள்ளது நான் அல்ல, அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என சோலார் பேனல் மோசடியில் சிக்கிய நடிகை சரிதா நாயர் தெரிவித்தார்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த சரிதா நாயர். இவருடன் இவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது சரிதா நாயர் ஆஜராகி வருகிறார். கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள சரிதா நாயரின் ஆபாச படங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக கோவை வந்த சரிதா நாயர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசியல் உள்நோக்கத்தோடு தன்னை பற்றி ஆபாச வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இருந்தே தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் வந்து கொண்டிருந்தது.
துபாய், சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளில், ' சோலார் பேனல் வழக்கில் கேரளா முதலமைச்சர் உம்மன்சாண்டி, ஐந்து அமைச்சர்கள் மற்றும் ஏழு சட்டசபை உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.
அவ்வாறு தெரிவிக்காவிட்டால் தன்னை பற்றி சித்தரிக்கப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் அவர்கள் மிரட்டினர். அதன்படியே இந்த ஆபாச படங்கள் சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல. அது முழுக்க முழுக்க உருமாற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ காட்சிகள். வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்
இவ்வாறு சரிதா நாயர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications