போரூர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 10 ஒடிஷா தொழிலாளர்கள் கதி என்ன?
சென்னை: தமிழகத்தை உலுக்கிய போரூர் மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் சிக்கிய 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.
சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு சனிக்கிழமையன்று மாலை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. 30க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று மூன்றாவது நாளாக அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒடிஷா மாநிலம் கஜபதி மாவட்டம், காசிநகர் பகுதியைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் உட்டி பாப்பா ராவ் (வயது 50) என்பவர் மட்டும் நேற்று இரவு உயிரோடு மீட்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உட்டி பாப்பா ராவின் மனைவி மற்றும் இரண்டு மகள்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதேபோல் மொத்தம் 10 ஒடிஷா மாநில தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒடிஷா மாநில எம்.எல்.ஏ சூரிய ராவ், தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications