Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருகலைக்க நாட்டு மருந்து.. 3 மாதமாக இறந்தே கிடந்த சிசு.. கர்ப்பப்பையில் சீழ்.. ஒடிஸா கர்ப்பிணி பலி

Subscribe to Oneindia Tamil

அம்பத்தூர்: பிரசவத்திற்கு பயந்து கருவை கலைக்க நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    கருகலைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண்... சிசு இறந்து கர்ப்பப்பை அழுகி பலி.. அதிர்ச்சி சம்பவம்!

    ஒடிஸாவை சேர்ந்தவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா (23). இவர்கள் இருவரும் சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தனர். பிரதாப் அங்கு கட்டட தொழிலாளியாக இருந்து வருகிறார்.

    குமாரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள குமாரியின் அண்ணி பிரசவத்தின்போது இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதையடுத்து அந்த இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரதாப் உள்கா- குமாரி கஞ்சக்கா தம்பதியினர் ஒடிசா சென்றுள்ளனர்.

    கர்ப்பிணியின் இறப்பு

    கர்ப்பிணியின் இறப்பு

    அங்கு இறுதி சடங்கில் பங்கேற்ற குமாரியிடம் அவருடைய உறவினர்கள் கர்ப்பிணியின் இறப்பு குறித்தும், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்தும் பேசியுள்ளனர். இது போல தானும் குழந்தை பிறக்கும் போது இறந்து விடுவோமோ என்று அஞ்சிய குமாரி, தனது வயிற்றில் வளர்ந்த 4 மாத சிசுவை கலைக்க முடிவு செய்துள்ளார்.

    சொந்த ஊரில்

    சொந்த ஊரில்

    அதை தனது கணவருக்கு தெரிவிக்காமல் தனது தோழியிடம் இதற்காக உதவி கேட்டுள்ளார். தோழியின் அறிவுரைப்படி அவருடைய சொந்த ஊரில் உள்ள ஒரு நபரிடம் சென்று கருகலைப்புக்கான நாட்டு மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமலே இருந்து வந்துள்ளார். மருந்து சாப்பிட்டதில் இருந்தே குமாரி அவ்வப்போது நோய்வாய்பட்டபடி இருந்துள்ளார்.

    உடல்நிலை மோசம்

    உடல்நிலை மோசம்

    ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில் குமாரியின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் மோசமடைந்துள்ளது. திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீர் வெளியேறாமல் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னரே தான் கருக்கலைப்புக்காக நாட்டுமருந்தை உட்கொண்டதாக குமாரி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

    உடல்நிலையில் முன்னேற்றம்

    உடல்நிலையில் முன்னேற்றம்

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கியுள்ளனர். இதையடுத்து குமாரியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் வழக்கம்போல தங்கள் வேலைகளை கவனிக்க தொடங்கியுள்ளனர்.

    கேஎம்சி மருத்துவமனை

    கேஎம்சி மருத்துவமனை

    ஆனாலும் ஒருசில நாட்களிலேயே குமாரியின் உடல்நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்த குமாரியின் கணவருக்கு, அவர்கள் தங்கி இருக்கும் வீட்டு உரிமையாளர் செல்போனில் தொடர்பு கொண்டு, குமாரி மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கி கிடப்பதாக தெரிவித்தார். இதனால் பதறிப்போன பிரதாப் உடனடியாக வீட்டிற்கு வந்து, தனது மனைவியை வாகனம் மூலம் கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

    உடல்நிலை மோசம்

    உடல்நிலை மோசம்

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அவருடைய கர்ப்பப்பை பாதிக்கப்பட்டு, சீழ் பிடித்து மிகவும் பலவீனமாக இருப்பதாலும் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அபாய கட்டத்திலேயே இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இறந்த மனைவி

    இறந்த மனைவி

    இதற்கு குமாரியின் கணவர் ஒப்புக்கொண்டதையடுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் குமாரியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்தால் அவரை காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குமாரின் சகோதரி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இறந்த சிசு

    இறந்த சிசு

    புகாரின் அடிப்படையில போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் உள்காவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கர்ப்பிணியான குமாரி கருகலைப்புக்கான நாட்டுமருந்தை வாங்கி சாப்பிட்ட சில நாட்களிலேயே வயிற்றில் இருந்த சிசு இறந்து விட்டதாகவும் ஆனால், இறந்த சிசு வெளியேறாமல் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயிற்றிலேயே தங்கிவிட்டதால் கர்ப்பபையில் சீழ் வைத்து இறப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட குடும்பநல இணை இயக்குனர் டாக்டர் அமுதா குமாரியின் கணவரான பிரதாப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+