ஆரியங்காவு குகையில் மண் சரிவு.. அதைப் பார்க்காமல் "ஆய்வு" மேற்கொண்ட ரயில்வே அதிகாரிகள்
செங்கோட்டை: செங்கோட்டை, கொல்லம் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், ஆரியங்காவு குகையில் ஏற்பட்ட மண் சரிவை பார்க்காமல் சென்றதால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைத்த முக்கிய ரயில் பாதை செங்கோட்டை கொல்லம் ரயில் பாதை. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த ரயில் பாதையில் செங்கோட்டை புனலூர் இடையே உள்ள 51 கிலோ மீட்டர் தொலைவு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதை அமைக்கும் பணிகடந்த 48 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இப்பணியை மூன்று ஒப்பந்தக்காரர்கள் செய்து வருகின்றனர். இத்தடத்தில் 5 மலைக்குகைகள் உள்ளன. புளியரை ஆரியங்காவு பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள முதல் மலைக்குகை உள்ளது. இந்த குகையில் 200மீட்டர் தூரம் வரை இரும்பு கம்பிகளால் வளைவை உருவாக்கி சிமெண்ட் சிலாப்புக்கள் வைத்து ஆர்ச் கட்டப்பபட்டு வருகிறது. இப்பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
நேற்று மாலையில் குகையில் பணி நடந்துக் கொண்டிருந்த போது திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு குகைப் குதியை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அதன் பின் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்க்கனவே கடந்த ஆண்டு மண் சரிந்து விழுந்தது. அதை அகற்றி முடித்து அடுத்தக்கட்ட பணிகளுக்கு செல்லும் போது மீண்டும் மண் சரிவு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பணிகள் எதுவும் தொடரவேண்டாம் என்றும் அதிகாரிகள் தரப்பு சொல்லியுள்ளதால் பணிகள் அனைத்தும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் மத்தியில் கேட்டபோது இத்தடத்தில் உள்ள பாறைகள் அனைத்தும் சுக்கான் வகைப் பாறைகள் கடினத் தன்மை கிடையாது. சரல் வகையை சார்ந்தது. அதனால்தான் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு வருகிறது என்றனர். இந்த தடத்தில் நாளை தென்னக ரயில்வே அதிகாரிகள் குழு நேரில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர் என்று நேற்று தெரிவித்தனர்.
அதன்படி, இந்த பகுதியை இன்று பார்வையிட தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி மற்றும் கொல்லம் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசந்திரன், பத்தினம் திட்டா பாராளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் உள்ளிட்டோர் வருவதாகவும், இதனை பார்வையிட்ட பின்னர் அவர்கள் ஆரியங்காவு பாலம், தென்மலை 13 கண் பாலம், புனலூர் ரயில்வே நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்துதல் போன்ற ஆய்வுகளை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் அதிகாரிகள் குழுவினர் அங்கு வராமல் நேராக ஆரியங்காவு ரயில்வே பாலம் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுகளை முடித்துவிட்டு சென்றுவிட்டனர். வரும் 15ந் தேதி தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா வர இருப்பதால், இந்த அதிகாரிகள் இந்த சுற்று பயணத்தை முடித்து சென்றதாக பயணிகள் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications