நெல்லையப்பர் கோயில் உண்டியல் வசூல் ரூ.9 லட்சம்.. ரூ.500, 1000 மட்டும் 2 லட்சம்!
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.500ல் 202 நோட்டுகளும், ரூ.1000ல் 84 நோட்டுகளுமாக ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் நோட்டுகள் இருந்தன.
நெல்லை: பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறி்விக்கப்பட்டதால் நெல்லையப்பர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் பல நோட்டுகள் பழைய நோட்டுகளாக இருந்ததால் அதிகாரிகள் திகைத்தனர்.
கடந்த 8ம் தேதி இரவு மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாயா நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதை தொடர்ந்து வங்கிகளில் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோத வருகிறது. சில்லரை நோட்டுகளை பெற ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் வரிசையில் காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் உண்டியலை டிசம்பர் 31ம் தேதிக்குள் திறந்து எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோயில் உண்டியலை திறந்து பணத்தை எண்ணும் போது மதிப்பு குறைந்த சில்லரை பணத்தை தனி நபரிடம் மாற்ற கூடாது எனவும், அவ்வாறு மாற்றினால் கோயில் நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இதில் 9 லட்சத்து 16 ஆயிரத்து 299 ரூபாயும், தங்கம் 81 கிராம் 500 மில்லியும், வெள்ளி 698 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த பழைய ரூபாய் நோட்டுகளான ரூ.500ல் 202 நோட்டுகளும், ரூ.1000ல் 84 நோட்டுகளுமாக ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள், பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவை அனைத்தையும், வங்கிகள் வாயிலாக மாற்ற வேண்டிய தேவையுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications