6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற கொள்ளையர்கள்... ஈரோட்டில் அதிர்ச்சி
ஈரோடு அருகே 6 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு: ஈரோடு அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைக்காக மூதாட்டியை கொள்ளையர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடித்த கரட்டாம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவருடைய 2 மகன்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

78 வயதான ராம லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் ராமலட்சுமி வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது ராமலட்சுமி தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ராமலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி மாயமாகியுள்ளதால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராமலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் தான் ஊர் அடங்கிய பிறகு இரவு நேரத்தில் அவரை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 6 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications