For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லையில் ஜெ. பொதுக்கூட்டத்திற்கு வந்த முதியவர் சாவு! பிரசார பலி எண்ணிக்கை 7-ஆக உயர்வு

By Veera Kumar
Google Oneindia Tamil News

நெல்லை: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நெல்லை பிரசார கூட்டத்திற்கு வந்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா பங்கேற்ற விருதாசலம், சேலம், மதுரை பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற தொண்டர்கள் 6 பேர் வெயில் உள்ளிட்ட பல காரணங்களால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். ஜெயலலிதா தனது பிரசாரத்தை மதியத்தில் இருந்து மாலை நேரத்திற்கு மாற்றிய பிறகு உயிர் பலி நின்றிருந்தது.

Old man died in Jayalalitha campaign rally at Nellai on Thursday

இந்நிலையில், பாளையங்கோட்டையில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த புளியங்குடியை சேர்ந்த ராஜமணி என்ற 70 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்து திரும்பும்போது, வாகன நிறுத்தம் பகுதியில் ராஜமணி சரிந்து விழுந்து இறந்துள்ளார்.

நெல்லையில் வானம் மேகமூட்டத்துடன், சாரல் மழையுடன் காணப்பட்டது. எனவே வெயில் பாதிப்பால் ராஜமணி இறந்திருக்க வாய்ப்பில்லை. மது அருந்தியது உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
Old man died in Jayalalitha campaign rally at Nellai on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X