For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குவியும் பானைகள்.. ஜிஎஸ்டியால் விற்பனை சரிவு!

பொங்கல் பண்டிகையையொட்டி கோட்டாரில் வெங்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பொங்கல் பண்டிகையையொட்டி கோட்டாரில் வெங்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் கோட்டாரில் உள்ள பாத்திரக்கடைகளில் வெங்கலம், பித்தளை, செம்பு பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

On the Pongal festival, the bronze vessels are comes for sale in Kottar at Kanniyakumari

தலைபொங்கல் கொண்டாடும் புதிய தம்பதிகளுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து பொங்கல் சீர் வழங்குவது வழக்கம். இதில் பொங்கல் இடுவதற்கு புதிய பானையும் இடம் பெறும். பொதுமக்கள் வாங்க வசதியா கோட்டார் மார்கெட்டில் பானைகள் குவிந்துள்ளன.

ஆனால் ஜி.எஸ்.டி. வரி மற்றும் வாகன வாடகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாக உள்ளது. இது குறித்து வர்த்தக சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, மதுரை, கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து வெங்கலம், பித்தளை பானைகள் வந்துள்ளன.

கடந்த ஆண்டை விட பித்தளை, செம்பு பாத்திரங்களுக்கு கிலோ ரூ.300 வரை அதிகரித்துள்ளது. செம்பு கிலோ ரூ830, ரூ950 ல் இருந்து ரூ.1000, 1250 வரை விற்பனையாகிறது. பித்தளையும் கிலோவுக்கு ரூ.80, 90 வரை அதிகரித்துள்ளது. பழைய பாத்திரங்களை கிலோ ரூ.420 க்கு எடுக்கிறோம். இன்னும் விற்பனை பெரிய அளவில் சூடுபிடிக்கவில்லை. ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே சில்லரை வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றார்.

English summary
On the Pongal festival, the bronze vessels are comes for sale in Kottar at Kanniyakumari. But due to GST the sale is reduced the sellers says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X